பணியின் போது உயிரிழந்த திண்டுக்கல் ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் அடக்கம்

பணியின் போது உயிரிழந்த திண்டுக்கல் ராணுவ வீரரின் உடல்  ராணுவ மரியாதையுடன் அடக்கம்
X

உயிரிழந்த ராணுவவீரரின் உடலுக்கு மரியாதை செலுத்திய திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன்

பீரங்கியை இயக்கி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகே உள்ள வாலி செட்டியபட்டி சேர்ந்த ராணுவ வீரர் சடையப்பன் நாயக் சுபேதர் என்பவர் அருணாச்சல பிரதேசத்தில் சீனா எல்லை பகுதியான ஓரக் என்னும் இடத்தில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் 17 -ஆம் தேதி ஆப்பரேஷன் சுனொலெபட் பொபேஸ் என்னும் பீரங்கியை இயக்கி கொண்டிருந்த போது மோசமான வானிலை காரணமாக திடீர் மயங்கி விழுந்துள்ளார். சக ராணுவ வீரர்கள் அங்கு உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இதையடுத்து சொந்த ஊரான வேடசந்தூர் அருகே உள்ள வாலி செட்டியபட்டி யில் உள்ள அவர் இல்லத்திற்கு அருணாச்சல் பிரதேஷத்தில் இருந்து விமானத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

உயிரிழந்த சடையப்பன் நாயக் சுபேதர்இந்திய ராணுவத்தில் சிறந்த வீரராகவும் துப்பாக்கி சுடும் பயிற்சியாள ராகவும் உடற்பயிற்சியாளராகவும், பீரங்கி இயக்கும் பயிற்சியாளராக, குறுகிய காலத்தில் உயர்ந்த இடத்திற்க்கு சென்றவர் என்று உடன் பணியாற்றிய இராணுவ வீரர்கள் உருக்கத்துடன் தெரிவித்தனர்.

இவருக்கு பழனியமாள் என்ற மனைவியும் கல்லூரியில் பயிலும் மகனும், பள்ளியில் பயிலும் மகளும் உள்ளனர்.இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் விசாகன் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் தலைமையில் இராணுவ மரியாதை செலுத்தி அடக்கம் செய்யப்பட்டது. இராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி கிராம மக்கள் சுமார் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்டோர் அஞ்சலி செலுத்தினார்கள். இராணுவ வீரர் மரணம் தொடர்பாக அரசு ஆவணங்களை தாமதமின்றி விரைந்து வழங்க வேடசந்தூர் வட்டாச்சியருக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.


Tags

Next Story
Weight Loss Tips In Tamil