திண்டுக்கல் அருகே தார்சாலை அமைக்கும் பணியில் விபத்து: ஒருவர் பலி,மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை

திண்டுக்கல் அருகே தார்சாலை அமைக்கும் பணியில் விபத்து: ஒருவர்  பலி,மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை
X

சிகிச்சை பெற்றுவரும் சின்னதுரை.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே தார்சாலை அமைக்கும் பணியின் போது ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலிஆனார், மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தார்சாலை அமைக்கும் பணியில் விபத்து ஒருவர் சம்பவ இடத்தில் பலி.மற்றொருவர் தீ காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் தாலுகா, வடமதுரை அருகே குப்பமுத்துபட்டியில் இருந்து அதிகாரிபட்டி மெயின் ரோடு வரை கடந்த மூன்று தினங்களாக தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள அய்யம்பாளையத்தை சேர்ந்த காளியப்பன் (41) மற்றும் திருச்சி மாவட்டம் புத்தாநத்ததை சேர்ந்த சின்னதுரை (43) இருவரும் தார் மற்றும் ஜல்லி கலவையாக சேர்க்கப்படும் இயந்திரத்தில் பணி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது இயந்திர கோளாறு காரணமாக இருவரும் இயந்திரத்தின் உட்பகுதியில் விழுந்ததால் காளியப்பன் என்பவர் வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சின்னத்துரை என்பவர் வயிறு மற்றும் கை பகுதிகளில் பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் சாலை அமைக்கும் பணியாளர்களுக்கு முறையாக பாதுகாப்பு உபகரணங்கள் கொடுக்காத காரணத்தால் உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!