வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு

வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பொதுமக்கள் திடீர் தர்ணா: பரபரப்பு
X

வட மதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள். 

பத்திரப்பதிவில் தாமதம் செய்வதாகக்கூறி, வடமதுரை பத்திரப்பதிவு அலுவலகத்தில், பொதுமக்கள் இன்று தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. வடமதுரை உள்ளிட்ட சுற்றுப்பகுதிகளில் உள்ள மக்கள், இடம் வாங்குவது விற்பது தொடர்பாக பத்திரப்பதிவுகள், இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகிறது.

இந்நிலையில், தற்போது இணைய சேவை செயல்படவில்லை என்று கூறி, பத்திரப்பதிவு செய்வதில் தாமதம் செய்யப்படுவதாக, பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், குறிப்பிட்ட அரசியல் கட்சி பிரமுகர்களுக்கும், வசதி படைத்தவர்களுக்கு மட்டும் முன்னுரிமை தந்து பத்திரப்பதிவு செய்வதாகவும் பொதுமக்கள் சிலர் குற்றம்சாட்டி, இன்று அலுவல வளாகத்தில் திடீரென அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!