/* */

பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுயேச்சை கவுன்சிலர்

திண்டுக்கல்லில் உள்ள பாளையம் பேரூராட்சியின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் தனது பதவியை ராஜினாமா செய்தார்

HIGHLIGHTS

பேரூராட்சி துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்த சுயேச்சை கவுன்சிலர்
X

பாளையம் பேரூராட்சி துணை தலைவரான சுயேச்சை கவுன்சிலர் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமியை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.

திண்டுக்கல் மாவட்டம், பாளையம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் 7 வார்டுகளில் தி.மு.க.வும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க. தலா ஒரு வார்டிலும், 3 வார்டுகளில் அ.தி.மு.க.வும் மற்றும் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் பேரூராட்சி தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் கடந்த 4-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது. இதில் 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் பழனிசாமி தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதன் பிறகு அன்று மதியம் துணைத்தலைவர் தேர்தல் நடந்தது. இதில் கூட்டணியில் துணைத்தலைவர் பதவி ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் 4-வது வார்டு ம.தி.மு.க. கவுன்சிலர் லதா துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 13-வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து மறைமுக தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது 15 வார்டு கவுன்சிலர்கள் வாக்களித்தனர்.

பின்னர் முடிவுகள் எண்ணப்பட்டபோது சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் 10 வாக்குகளும், அ.தி.மு.க. கவுன்சிலர் 5 வாக்குகளும் பெற்றனர். இதையடுத்து சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் திமுக நிர்வாகியான சுயேச்சை கவுன்சிலர் கதிரவன் பாளையம் பேரூராட்சி செயல் அலுவலர் ராஜலட்சுமியை சந்தித்து துணை தலைவர் பதவியை, ராஜினாமா செய்வதாக கூறி ராஜினாமா கடிதத்தை அவரிடம் கொடுத்தார்.

பின்னர் பேசிய கதிரவன் கடந்த 30 ஆண்டுகளாக நான் திமுக நிர்வாகியாக இருந்து வருகிறேன். தற்போது நான் துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட போதும், திமுக தலைவரின் ஆணைக்கிணங்க துணைத்தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டேன் என்று கூறினார்.

Updated On: 7 March 2022 12:08 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சீற்றத்தை அடக்கி ஆளும் சீறாப்புதல்வன், 'மௌனம்'..!
  2. லைஃப்ஸ்டைல்
    அடிப்படை தேவைகளுக்கு அப்பால்: நடுத்தர வர்க்கத்தின் கனவுகளும்...
  3. வீடியோ
    Savukku Shankar வழக்கில் அதிரடி திருப்பம் | நீதிமன்றம் அதிரடி உத்தரவு...
  4. லைஃப்ஸ்டைல்
    அமைதி உங்களுக்குள்தான் இருக்கிறது..? வெளியில் ஏன் தேடுகிறீர்கள்..?
  5. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை ஊட்டும் மேற்கோள்கள்: வாழ்க்கையை வெற்றிபெறும் திறவுகோல்!
  6. கவுண்டம்பாளையம்
    கோவை விமான நிலையத்தில் 1.220 கிலோ தங்ககட்டிகள் பறிமுதல்
  7. மேட்டுப்பாளையம்
    கோவையில் சட்டவிரோதமாக தங்கி பணிபுரிந்து வந்த இரு வங்கதேச இளைஞர்கள்...
  8. லைஃப்ஸ்டைல்
    மன ஆரோக்கியத்திற்கு வழி செய்யும் தந்திரங்கள்
  9. வீடியோ
    🔴LIVE : தெலுங்கானாவில் அண்ணாமலையின் அனல் பறக்கும் உரை || #annamalai...
  10. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் மீது சென்னையில் வழக்கு..!