விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக- எடப்பாடிபழனிச்சாமி

விவசாயிகளுக்கு துரோகம் செய்தது திமுக- எடப்பாடிபழனிச்சாமி
X

விவசாயிகளுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு தான் என திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டினார்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் டாக்டர் பரமசிவத்தை ஆதரித்து வேடசந்தூர் ஆத்துமேட்டில் வேனில் இருந்தபடியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் :- திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் நன்மைக்காக எந்த திட்டத்தை பற்றியும் பேசமாட்டார். ஏனென்றால் அவரிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. மக்களைப் பற்றி சிந்திக்கக் கூடிய ஒரே அரசு அதிமுக அரசு தான்.

விவசாயிகளுக்கு துரோகம் செய்த கட்சி திமுக. விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசுகின்ற ஒருவர் நாட்டுக்கு தேவையா ?. நான் இன்றைக்கும் விவசாயம் செய்து வருகிறேன். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு போய்விடும்.இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக உள்ள மாநிலம் தமிழ்நாடு. அதிமுக ஆட்சியில் இதுவரை 6 ஆயிரம் ஏரிகள் தூர் வரப்பட்டுள்ளது ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

நீட் தேர்வை கொண்டு வந்தது திமுக, காங்கிரஸ் ஆட்சி. நீட் தேர்வு குறித்து அதிமுகவை குற்றம் சாட்டி வருகிறது திமுக. தமிழகத்தில் நீட் தேர்வு வரக்கூடாது என்பது தான் நமது நிலைப்பாடு . திமுக தலைவர் இந்த ஆட்சியில் ஒன்றும் நடக்கவில்லை என்று பச்சை பொய் சொல்கிறார் என பேசினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!