இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகள் வெளியீடு
X

காக்காதோப்பு பிரிவில் இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பதினேழு வயது சிறுமியின் இரண்டு கால்கள் முறிந்த சிசிடிவி காட்சிகள் வெளியீடு.

இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் பதினேழு வயது சிறுமியின் இரண்டு கால்கள் முறிந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

திண்டுக்கல்லில் இருந்து வேடசந்தூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த வாணிக்கரையை சேர்ந்த மாயக்கண்ணன் மற்றும் அவரது அண்ணன் மகளான பதினேழு வயது சிறுமி இருவரும் திண்டுக்கல்லில் ஆதார் கார்டை பெயர் மாற்றம் செய்வதற்காக சென்றுள்ளனர். இவர்கள் மீண்டும் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் நோக்கி திரும்பும்போது, அரவக்குறிச்சி தாலுகா புங்கம்பாடியைச் சேர்ந்த 28 வயதான அருள்ஜோதி என்பவர் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது.

அப்போது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதியது. இதில் இருசக்கர வாகனங்களில் வந்த இருவரையும் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 17 வயது சிறுமிக்கு இரண்டு கால் எலும்புகளும் முறிந்தது. பலத்த காயமடைந்த இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

தற்போது இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கிறது. இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!