தனியார் பேருந்து மீது ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்

தனியார் பேருந்து மீது  ஆம்புலன்ஸ் வாகனம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்
X

தனியார் பேருந்தின் பின்புறம் மோதிய ஆம்புலன்ஸ் வாகனம் சேதமடைந்தது

108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை அழைத்து வந்தபோது தனியார் பேருந்தின் பின்பக்கம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர்.

திண்டுக்கல் அருகே மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் நோயாளிகளை அழைத்து வந்தபோது தனியார் பேருந்தின் பின்பக்கம் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். மருத்துவ உதவியாளர் உள்ளிட்ட 5 பேர் படுகாயமடைந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் நடராஜ் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் அனுப்பி வைத்தனர்.

மேல் சிகிச்சைக்காக வந்த இருவருடன் அவர்களது உறவினர்கள் 5 பேர் பயணித்தனர். 108 ஆம்புலன்ஸ் வாகனத்தை சங்கர் என்பவர் ஓட்டினார். மருத்துவ உதவியாளரான சத்யா வாகனத்தின் முன் இருக்கையில் அமர்ந்து பயணித்த நிலையில் மொத்தமாக அந்த வாகனத்தில் ஒன்பது பேர் பயணித்தனர்.

திண்டுக்கல் கரூர் சாலையில் சத்திரப்பட்டி அருகே வந்தபோது முன்னால் பயணிகளை இறங்குவதற்காக நின்ற தனியார் பேருந்தின் பின் பக்கத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் அதி வேகமாக மோதியது. இதில் மேல்சிகிச்சைக்காக ஆம்புலன்சில் வந்த பழனிச்சாமியும் மற்றும் ஒருவரும் உயிரிழந்தனர்.

அவர்களுடன் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்தனர். மேலும் ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் சத்யாவின் கால்கள் உடைந்து முற்றிலும் சேதம் அடைந்தது 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் சங்கர் லேசான காயங்களுடன் தப்பினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் உயிரிழந்த இருவர் உடல்களை கைப்பற்றி திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 5 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் படுகாயமடைந்த ஒருவர் மட்டும் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாசன் விபத்து நடந்தது குறித்து விசாரணை மேற்கொண்டார்.

இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!