உண்மையை மட்டுமே நம்புங்கள்- அதிமுக வேட்பாளர்

உண்மையை மட்டுமே நம்புங்கள்- அதிமுக வேட்பாளர்
X

உண்மையை நம்புங்கள் என திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அதிமுக வேட்பாளர் பரமசிவம் பொதுமக்களிடையே வாக்கு சேகரித்தார்.

வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் பரமசிவம் போட்டியிடுகிறார். இவர் நேற்று நாகையன் கோட்டை, கோவிலூர், வெல்லப்பட்டி, எரியோடு ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசுகையில்:-

இந்த தொகுதியை பொறுத்தவரை 350 நீர்நிலைகள் மீட்டெடுக்கப்பட்டு தூர்வாரி அனைத்து குளங்கள் மற்றும் ஏரிகள் தயார் நிலையில் உள்ளது.மாயனூர் அணைத் திட்டம் செயல்பட முழுக்க முழுக்க எடப்பாடி பழனிச்சாமி அரசு தான் காரணம். சாதாரண விவசாய குடும்பத்தில் இருந்து நமது முதலமைச்சர் வந்ததால் தான் கிராமப்புறங்களில் உள்ள கஷ்டங்களை அறிந்து இந்தத் திட்டத்தை உடனே அறிவித்தார். அதேபோல் எங்கள் தொகுதியில் உள்ள குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக 186 கிராமங்களுக்கு காவிரி நீர் புதிய இணைப்புக்கு 20 கோடி ஒதுக்கி நிறைவு பெற்றுவிட்டது.

இதையடுத்து 72 கோடி ரூபாய் மதிப்பில் திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் வேடசந்தூர் தொகுதிக்கும் புதிய கூட்டு குடிநீர் திட்டத்திற்காக முதலமைச்சர் மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சரும் ஆய்வு முடித்து ஒப்புதல் அளித்து தற்போது பைனான்ஸில் உள்ளது. அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு வேடசந்தூர் தொகுதி கூட்டு குடிநீர் திட்டம் வந்துவிடும். குடிநீர் பிரச்சனை தீர்க்கப்படும். அதனால் பொதுமக்கள் அனைவரும் உண்மையை மட்டுமே நம்புங்கள். உங்களுக்காக பணியாற்ற நான் காத்திருக்கிறேன் என்று வேட்பாளர் பரமசிவம் பேசினார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!