கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பேர் காயம்:ஒருவர் மருத்துவமனையில் பலி

கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி 5 பேர் காயம்:ஒருவர்  மருத்துவமனையில் பலி
X
ஐந்து இருசக்கர வாகனங்களின் மீது மோதியது. அங்கிருந்த தள்ளு வண்டியின் மீது மோதிவிட்டு 50 மீட்டர் தூரம் சென்று நின்றது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கூட்டத்திற்குள் புகுந்ததில் ஐந்து பேர் பலத்த காயம். ஒருவர் மருத்துவமனையில் உயிரிழப்பு.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள சீத்தமரம் நால்ரோட்டில் எரியோடு அருகே உள்ள தூங்கணம்பட்டியைச் சேர்ந் அஜித்(24) என்பவரும், தனபால்(22 )என்பவரும் சொகுசு காரில் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள ஓடைப்பட்டியில் நடைபெறும் கட்டட பணிகளை பார்வையிட சென்று கொண்டிருந்த பொழுது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் திடீரென குறுக்கே புகுந்ததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த மற்றும் எதிரே வந்து கொண்டிருந்த ஐந்து இருசக்கர வாகனங்களின் மீது பயங்கரமாக மோதியது. அங்கிருந்த தள்ளு வண்டியின் மீது மோதிவிட்டு 50 மீட்டர் தூரம் சென்று நின்றது. இவ்விபத்தில் உலகநாதன், மூர்த்தி, சூர்யா, வீரப்பன், நிவேதா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்

5 இருசக்கர வாகனங்கள் நொறுங்கியது: சம்பவம் நடந்த உடன் ஏராளமானோர் சம்பவ இடத்தில் கூடியதால் வேடசந்தூர் ஒட்டன்சத்திரம் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் சம்பவம் குறித்து விசாரணை செய்து காரில் வந்த அஜித் மற்றும் தனபால் ஆகியோரை விசாரணைக்காக வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர் அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளித்தார் பலத்த காயமடைந்தவர்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இதில் மூர்த்தி என்பவர் மட்டும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!