புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனம் நிவாரண உதவி வழங்கல்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனம்  நிவாரண உதவி வழங்கல்.
X

புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

அமைதி அறக்கட்டளை மற்றும் ஃப்ரீடம் பண்ட் சார்பில் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் விட்டல் நாயக்கன் பட்டி,கோட்டையூர்,காக்காத்தோப்பு ஆகிய இடங்களில் தங்கி பணிபுரியும் ஒடிசா,பீகார், அஸ்ஸாம் மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண பொருட்கள் அரிசி,பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட 13 வகையான மளிகைக் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் 70 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

அமைதி அறக்கட்டளை தலைவர் பா.ரூப பாலன் ஆலோசனையின்படி திட்ட மேலாளர் ஆ. சீனிவாசன் வழிகாட்டுதலின்படி ஒருங்கிணைப்பாளர்கள் பவித்ரா, சசிகலா, புவனா, முனியாண்டி, நாகலட்சுமி, சுகன்யா, திவ்யா மற்றும் தன்னார்வலர்கள் ராஜேஸ்வரி, கோகிலா,ரேணுகா ஒருங்கிணைப்பு செய்தார்கள்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்று பொருட்களை பெற்றுச் சென்றனர்.

Tags

Next Story
the future of ai in healthcare