சபரிமலை சீசன் எதிரொலி பழனி மலைக்கோயில்களில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
பழனி மலைக்கோயிலில் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டம்
sabarimala season,palani temple over crowd
ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கும் முருகன் (கோப்பு படம்)
sabarimala season,palani temple over crowd
சபரிமலை பக்தர்கள் குவிந்ததால் பழனி முருகன் மலைக்கோவிலில் நேற்று கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் வந்ததால் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.தமிழகத்தில் உள்ள அறுபடை முருகன் கோயிலில் ஒன்று பழனிமலைத் திருக்கோயில் . இங்கு வருடந்தோறும் பக்தர்கள் கூட்டமானது நார்மலானநிலையில் காணப்படும். அதுவே விசேஷ காலத்தில் மாநிலத்தின் பலபகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூட்டம் அதிகரிக்கும்.
ஆனால் நேற்று சபரிமலை பக்தர்களின் கூட்டம் அதிகமானதால் பழனி மலைக் கோயில் வளாகத்தில் எள் போட்டால் எண்ணெய் எடுத்துவிடலாம் என்ற நோக்கில் நடக்ககூட வழிஇல்லாத நிலையே தொடர்ந்தது.இதனால் வயதானோர், சிறுவர்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
sabarimala season,palani temple over crowd
பழனி மலைக்கோயிலில் நேற்று முருகனைத் தரிசிக்க வந்த பக்தர்களின் கூட்டம்
sabarimala season,palani temple over crowd
வின்ச்சில் கூட்டம்
நேற்று வழக்கத்தினை விட அதிகமான கூட்டம் இருந்ததால் வின்ச்சில் செல்வதற்கு ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். ஏற்கனவே டிக்கெட் வாங்கியவர்களே அதிக நேரத்துக்கும் மேலாக காத்திருந்ததால் பலர் யானைப்பாதை வழியாக நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டது.
பராமரிப்பு பணிகள்
அடுத்த மாதம் பழனி கோயில் குடமுழுக்கு விழா நடக்கும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதனையடுத்து யானைப்பாதையில் உள்ள ரோடுகள் மற்றும் மண்டபங்களின் பராமரிப்பு பணிகள் வேறு நடந்து வருகிறது. இதற்காக கட்டிய சாரங்களின் தடுப்பால் அகலமான யானைப்பாதை குறுகலாகிவிட்டதால் தங்கத்தேர் முடிந்து மலையில் இருந்து கீழே இறங்கிய பக்தர்களால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. ஒரே வழியில் மேலே செல்லும் பக்தர்கள் வந்ததால் சிறிது நேரம் கூட்டம் ஸ்தம்பித்தது.
sabarimala season,palani temple over crowd
விரைவில்....பழனி மலைக்கோயில் கும்பாபிஷேக விழா நடக்க உள்ளதால் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது.
sabarimala season,palani temple over crowd
சபரிமலை பக்தர்கள் அல்லாமல் சாதாரண பக்தர்களின் கூட்டமும் நேற்று அதிகம் காணப்பட்டது. தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை ஆதலால் பலர் தங்கள் குடும்பத்துடன் கோயிலுக்கு வருகை தந்திருந்தனர். மேலும் சிறப்பு தரிசனம், மற்றும் இலவச தரிசனம் என இரண்டு வகைகள் உள்ளது. சிறப்பு தரிசன டிக்கெட் ரூ. 10 மற்றும் ரூ. 100 கவுன்டர்கள்உ ள்ளன. இதில் ரூ. 10 க்கான கவுன்டர் காலியாகவே இருந்தது. ரூ. 100 டிக்கெட் கவுன்டரே கூட்டம் நிறைந்து காணப்பட்டது.
ரூ. 100 டிக்கெட் வாங்கிய பக்தர்கள் சிறிது நேரம் கூண்டில் அடைத்து உட்கார வைத்துவிட்டனர். பின்னர் சிறிது நேரம் கழித்து திறந்துவிட்டு சுவாமிதரிசன க்யூவில் இதனை இணைக்கின்றனர். இதனால் நேற்று பழனி மலைக்கோயில் மற்றும் அடிவாரம் என மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்ததைக் காணமுடிந்தது.
முருகன் சிலை சிறப்பு
முருகனின் சிலை நவபாஷாணத்தால், சித்தர்களில் ஒருவரான போகரால் வடிவமைக்கப்பட்டது. நவபாஷாணம் எனப்படுவது ஒன்பது வகையான நச்சுப்பொருட்கள் சேர்ந்தது. இந்த நவபாஷாண சிலை மீன்களைப் போன்ற செதில்களைக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது இந்தச் சிலை சிறிது பழுதுபட்டுள்ளது. இரவில் இந்தச் சிலையின் மீது முழுவதுமாக சந்தனம் பூசப்பட்டு (சந்தனக்காப்பு) காலையில் விசுவரூப தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் சிறு வில்லை பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது மிகச்சிறந்த மருந்தாகக் கருதப்படுகிறது.
sabarimala season,palani temple over crowd
இரவு 7 மணியளவில் பவனி வந்த தங்கரதம்.... இதனைக் காண ஏராளமான பக்தர்கள் திரண்டு செல்போனில்படமெடுத்தனர்.
sabarimala season,palani temple over crowd
தங்கத்தேர் பவனி
பழனிமலைக்கோயிலில் தினந்தோறும் இரவு 7மணிக்கு தங்கத்தேர் பவனி நடக்கிறது. இதற்குண்டான கட்டணத்தினைக் கட்டியவர்கள் சிறிது துாரம் வரை இத்தேரினை இழுக்கலாம். ஒரு டிக்கெட்டுக்கு 2 பேர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். கோயில் வளாகத்தினைச் சுற்றி பல பாயின்டுகள் உள்ளது. அந்த இடத்திற்கு தங்கத்தேர் வந்தவுடன் வேறு நபருக்கு மாற்றம் செய்யப்பட்டு அவர்கள் தேரினை இழுப்பார்கள். உபயதாரர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதமும் இறுதியில் வழங்கப்படுகிறது.
பழனி பஞ்சாமிர்தம்
திருப்பதி என்றால் லட்டு என்பது போல் பழனி என்றால் பஞ்சாமிர்தம்தான். தேவஸ்தானம் சார்பில் பல பிரசாத விநியோக கடைகள் மலைப்பகுதியிலும், அடிவாரத்திலும் உள்ளன. பஞ்சாமிர்தம் ஒரு பாட்டில் விலை ரூ. 35 க்கும் டின் விலை ரூ . 40 க்கும் விற்கப்படுகிறது. நேற்று அளவுக்கு மீறிய கூட்டம் என்பதால் இதற்கும் கூட்டம் அலை மோதியது.
sabarimala season,palani temple over crowd
சிறப்பு தரிசனத்திற்காக ரூ.100 டிக்கெட் வழங்கும் கவுன்டர் பகுதியில் ஏராளமானோர் நீண்ட வரிசையில்நின்று டிக்கெட் வாங்கினர்.
வியாபாரிகளால் பாதிப்பு
பழனிமலை அடிவாரத்தில் உள்ள ரோடுகளில் பெண்கள் மற்றும் ஆண்கள் ரோட்டின் நடுவில் நின்று கொண்டு பல்வேறு பொருட்களை விற்பனை செய்கின்றனர். இதனால் பக்தர்கள் நடந்து செல்ல மிகுந்த சிரமப்பட்டனர். கோயில் நிர்வாகம் இதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளவேண்டும். இதனை பொதுமக்கள் தட்டிக்கேட்டால் வாக்குவாதந்தான் முற்றுகிறது.எ னவே கோயில்நிர்வாகம் போலீசாரிடம் சொல்லி இவர்கள் ரோட்டின் நடுவில்நின்று கொண்டு விற்பனைசெய்யாதவாறு கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வின்ச்சுக்கு கட்டுப்பாடு
பழனி மலைக்கோயிலுக்கு செல்ல வின்ச் மற்றும் படிக்கட்டுப்பாதை, யானைப்பாதை என 3 வழிகள் உள்ளன. படி வழியே நடக்கமுடியாதவர்கள் வின்ச் வழியாக செல்ல கோயில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டினை ச் செய்துள்ளது.
sabarimala season,palani temple over crowd
ரூ. 100 டிக்கெட் பக்தர்கள் தரிசன்த்திற்காக கூண்டில் சிறிது நேரம் அமரவைக்கப்பட்டிருந்தனர்
sabarimala season,palani temple over crowd
ஆனால் கூட்டம் அதிகம் உள்ள நாட்கள்,மற்றும்சாதாரண நாட்களில் நல்ல வாலிப வயதினை உடையவர்கள் உடல் ஆரோக்யம் மிகுந்தவர்கள் அனைவரும் வின்ச்சை பயன்படுத்துவதால் வயதானவர்கள் படி வழியே ஏறிச் செல்லும் நிலைதான் தற்போது தொடர்கிறது. எனவ கோயில் நிர்வாகமானது வின்ச்சில் செல்ல ஒரு சில கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வின்ச்சில் ஏறிச் செல்ல வயதானவர்கள், மற்றும் உடல் நலபாதிப்புடையவர்கள், மற்றும் மாற்றுத்திறனாளிகள்
உள்ளிட்டோர் மட்டும் இதனை பயன்படுத்த அனுமதிக்க புதிய உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu