கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர் கைது

கொடைக்கானலில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவர் கைது
X

கைதான இருவர்.

கொடைக்கானல் பகுதியில் பட்டப்பகலில் பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தொகுதி கொடைக்கானல் ஏரிச்சாலையில் பட்டப்பகலில் வடமாநில பெண்ணிடம் செல்போன், பணம் பறித்த செண்பகனூர் பகுதியை சேர்ந்த திலீப்குமார் (21), கோபாலகிருஷ்ணன் (21) ஆகிய 2 வாலிபர்களை மோட்டார் சைக்கிளுடன் கொடைக்கானல் போலீசார் கைது செய்தனர்.

மேலும் கைப்பையில் இருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.2 ஆயிரத்து 500 ஆகியவை கைப்பற்றப்பட்டு வடமாநில பெண்ணிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இது குறித்து கொடைக்கானல் போலீசார் விசாரணை செய்கிறார்கள்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!