மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை இடமாற்றம்.

மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை இடமாற்றம்.
X
பாச்சலூர் கிராமத்தில் 5-ம் வகுப்பு மாணவி இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்

திண்டுக்கல் மாவட்டம், பாச்சலூர் கிராமத்தில் 5-ம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வடலூரில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கடந்த சில வாரங்களுக்கு முன் சிறுமி உயிரிழந்தார்.அன்று பள்ளிக்கு வருகை புரிந்த தலைமையாசிரியர் முருகன், இடைநிலை ஆசிரியர் மணிவேல் ராஜ், பட்டதாரி ஆசிரியர் ராஜா துரை ஆகிய மூவரையும் பணி மாறுதல் செய்யப்பட்டனர்.

இவர்களை மேல்மலை கிராமமான கிளாவரை, பூண்டி, பழம்புத்தூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு பணி மாற்றம் செய்து இருப்பதாக மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். மேலும் தற்போது வரை பணிமாற்றம் செய்த 3 ஆசிரியர்களிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!