பழனி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
X

விருப்பாட்சியில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். 

பழனி அருகே விருப்பாட்சியில் வேட்டைக்கு செல்வதற்காக தென்னந்தோப்பில் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

பழனி அருகே உள்ள விருப்பாட்சியில் கண்ணாயிரம் என்பவரின் தென்னந்தோப்பில் வேட்டைக்கு செல்வதற்காக கள்ளத் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

சார்பு ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான போலீசார் தோட்டத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள தென்னை மரம் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 ஒற்றை குழல் உரிமம் இல்லாத துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்.

வேட்டைக்கு செல்வதற்காக துப்பாக்கிகளைப் பயன்படுத்தி வந்த த.புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (47), விருப்பாச்சியைச் சேர்ந்த முருகன் (55), ஒட்டன்சத்திரம் தாலுகா கொள்ளபட்டியைச் சேர்ந்த செந்தில் கணேஷ் (31) ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்