கொடைக்கானலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் போக்சோ சட்டத்தில் கைது

கொடைக்கானலில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மூவர் போக்சோ சட்டத்தில் கைது
X

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட  மூன்று பேர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் செண்பகனூர் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படித்த பள்ளி மாணவி இவரது தந்தை பார்வை இல்லாதவர். இவர்களை விட்டு இவரது தாய் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுள்ளார். மாணவியின் மாமன் கண்ணன் 42, அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்.

பார்வையில்லாத மாணவியின் தந்தையை வீட்டுக்கு கூட்டி வந்து விடுவது போல் விட்டு விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதேபோல குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த வனராஜ் மகன் மணிகண்டன் 22, இவரும் இதே செண்பகனூர் ஐயர் கிணறு பகுதியைச் சேர்ந்த நாகராஜ் மகன் குமார் 56 என்பவரும் அடிக்கடி வீட்டிற்கு வந்து மாணவியின் தந்தையை வீட்டுக்கு கூட்டி வந்து விட்டு செல்வார்கள்.

மாணவியின் தனிமையை பயன்படுத்திய இவர்களும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மைனர் சிறுமியை கடந்த பல வாரங்களாக இவர்கள் தனித்தனியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மாணவியை மிரட்டியும் உள்ளனர். இதுபற்றி சைல்டு ஹெல்ப் அமைப்பிற்கு அக்கம்பக்கத்தினர் தகவல் கொடுத்துள்ளனர். அந்த அமைப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து வந்த கண்ணன், மணிகண்டன், குமார் ஆகிய மூவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .

Tags

Next Story
ai marketing future