பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்

பழனி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்
X

பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் வெள்ளம்

புத்தாண்டை முன்னிட்டு பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஆங்கிலப்புத்தாண்டு தினமான அரசு பள்ளிகள் தொடர் விடுமுறை, அரசு விடுமுறை என்பதால் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

இதனால் மலைக்கோயில் வெளியே உள்ள பிரகாரங்கள் அனைத்தும் பக்தர்களின் வரிசை நீண்டு காணப்பட்டது. மலைக்கோயில் செல்ல வின்ச், ரோப்கார் நிலையங்களிலும் மலைக்கோயிலில் கட்டண, இலவச தரிசன வரிசைகளிலும் நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் நான்கு மணி நேரம் ஏற்பட்டது. மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு திருப்பள்ளி எழுச்சி நடத்தப்பட்டு பின் மூலவருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

மலைக்கோயிலில் உள்ள போகர் சன்னதியில் சிறப்பு அபிஷேக, அலங்காரம் நடைபெற்றது. அடிவாரம், சன்னதி வீதிகளிலும் ஏராளமான பக்தர்கள் நிறைந்திருந்தனர்.

பக்தர்கள் இந்த புத்தாண்டை சிறப்பாய் அமைய வேண்டும் இந்த வருடம் கொரோனா போன்ற தொற்று ஏற்படாமல் அனைத்து மக்களும் செழிப்பாக இருக்க வேண்டும் என பக்தர்கள் முருகனை வேண்டி வருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself