தேசிய சேவா சமிதி ஆக்சிஜன் இயந்திரத்தை பழனி மருத்துவமனைக்கு வழங்கல்

தேசிய சேவா சமிதி அமைப்பு சார்பில், ஆக்சிஜன் தயாரித்து வழங்கும் இயந்திரத்தை பழனி அரசு மருத்துவமனைக்கு இலவசமாக வழங்கினர்..

நாடு முழவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் பலருக்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் தினமும் கொரோனா நோயாளிகளின் வருகை அதிகரிப்பால் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது.

தேசிய சேவா சமிதி அமைப்பு சார்பில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் ஒன்று இலவசமாக வழங்கப்பட்டது.தேசிய சேவா சமிதி சார்பில் வழங்கப்படும் ஆக்சிஜன் தயாரிக்கும் இயந்திரத்தின் விலை ஐந்துலட்சம் ரூபாய் என்றும், இதுபோல தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு 150இயந்திரங்கள் வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

இந்த இயந்திரத்தின் மூலம் காற்றில் உள்ள ஆக்சிஜன் தனியாக பிரித்து உடனடியாக நோயாளிகளுக்கு வழங்கி உதவும்‌ என்றும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் தேசிய சேவா சமிதி அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!