கொடைக்கானல் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு பனிப் போர்வை

கொடைக்கானல்  மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு பனிப் போர்வை
X

 கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு பனிப் போர்வை போர்த்தப்பட்டுள்ளது.

வரும் 2022-ல் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக சால்வியா, ஆஸ்டர், அஸ்டோமேரியா, பேன்சி உள்ளிட்ட மலர்ச்செடிகள் நடப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக நடவு செய்யப்பட்ட செடிகளுக்கு பனிப் போர்வை போர்த்தப்பட்டது.

வரும் 2022-ல் நடைபெற உள்ள மலர்க் கண்காட்சிக்காக கடந்த மாதம் சால்வியா, ஆஸ்டர், அஸ்டோமேரியா, பேன்சி உள்ளிட்ட ஏராளமான மலர்ச்செடிகள் பூங்காவில் நடவு செய்யப்பட்டன. பருவமழை வெளுத்து வாங்கிய நிலையில் தற்போது வறண்ட வானிலை நீடிக்கிறது.முன்பனி காலம் துவங்கிய நிலையில் மாலையில் கடுங்குளிர் நீடித்து, மறுநாள் காலை 10:00 மணியையும் தாண்டி குளிர் நிலவுகிறது.

இந்தப் பனியில் மலர்ச்செடிகள் பாதிக்காமலிருக்க பூங்கா நிர்வாகம் நிழல் வலைகளை போர்வையாக போர்த்தி உள்ளது. பனிக் காலம் முடியும் வரை பனிப்போர்வை போர்த்தப்பட்டு செடிகள் கருகாமல் பராமரிப்பதால், நன்கு ஆரோக்கியமாக வளரும் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!