பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: ஆய்வாளர் மீது வழக்கு பதிவு

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: ஆய்வாளர் மீது வழக்கு பதிவு
X

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆய்வாளர் வீரகாந்தி.

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பழனியில் பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கீரனூர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றியவர் வீரகாந்தி. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே காவல்நிலையத்தில் பணிபுரியும் பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து பெண் காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் திண்டுக்கல் மாவட்ட ஏ.டி.எஸ்.பி லாவண்யா தலைமையில் புகார் கொடுத்த பெண் மற்றும் காவல்நிலையத்தில் பணிபுரியும் போலீசாரிடமும் விசாரணை நடைபெற்றது.

மேலும் குற்றச்சாட்டிற்கு உள்ளான ஆய்வாளர் வீரகாந்தி ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளர் வீரகாந்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!