தொடர் விடுமுறை: கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
கொடைக்கானல் ஏறியில் படகு சவாரி செய்த சுற்றுலாப்பயணிகள்.
பள்ளிகளுக்கு தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானலில் இரு வாரங்களாக மழை குறைந்து குளிர் அதிகரித்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கடந்த இரு நாட்களாக கொடைக்கானலில் குவிந்தனர்.
இதனால் விடுதிகள் நிரம்பி, அறைகளின் கட்டணமும் உயர்ந்தது. சுற்றுலாத் தலங்களான கோக்கர் ஸ்வாக், பிரையண்ட்பூங்கா, தூண்பாறை, குணாகுகை, மோயர்பாய்ண்ட், பைன்பாரஸ்ட், ரோஸ்கார்டன் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிகமாகக் காணப்பட்டனர்.
ஏரிச்சாலையில் சைக்கிள் ஓட்டியும் குதிரை சவாரி செய்தும், ஏரியில் செய்தும் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர். மேகக்கூட்டங்கள். பசுமை நிறைந்த மலைப்பகுதியை சுற்றுலாப் பார்த்து ரசித்தனர்.வாகனங்கள் அதிகரித்ததால் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதி, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நீண்ட வரிசையில் வாகனங்கள் காததிருந்து கடந்து சென்றன. பகலில் 16 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருந்தது. பகலிலேயே குளிர் நில வியது இரவில் குறைந்தபட்சமாக 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை நிலவியதால் கடும் குளிர் காணப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu