பெண்களுக்கு திருமண நிதியுதவி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் வழங்கல்

பெண்களுக்கு திருமண நிதியுதவி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் வழங்கல்
X

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் பேசிய பழனி எம்எல்ஏ- ஐ.பி. செந்தில்குமார் 

இதில் 200 -க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரசின் திருமண நிதியுதவி திட்டத்தில் 8 கிராம் தங்கமும் வழங்கப்பட்டன

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஏழை எளிய பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் வழங்கினார்.

பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலில் ஆதித்தனார் திருமண மண்டபத்தில் ஏழைப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், திருமணத்திற்கு நிதியுதவியுடன் 8 கிராம் தங்கம் வழங்கும் விழா இன்று (24.01.2022) நடைபெற்றது. இதில், 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு அரசால் வழங்கக்கூடிய நிதியுதவி திட்டமான 8 கிராம் தங்கத்தையும், இதனைத்தொடர்ந்து, நலத்திட்ட உதவிகளையும் , பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார் வழங்கினார். விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!