கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமையவுள்ள சின்னபள்ளம் செல்லும் சாலை சேதம்

கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமையவுள்ள சின்னபள்ளம் செல்லும் சாலை  சேதம்
X

கொடைக்கானல் சின்னப்பள்ளம் பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளதால் திணறும் வாகனங்கள்

ஹெலிகாப்டர் தளம் அமைக்க தொடர் ஆய்வுகளுக்கு வரும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள், அச்சாலையில் பயணிக்க முடியாமல் திணறுகின்றன

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஹெலிகாப்டர் தளம் அமையவுள்ள சின்னபள்ளம் பகுதிக்கு செல்லும் சாலை கடும் சேதம் அடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சுற்றுலா மேம்பாட்டிற்காக, சின்ன பள்ளம் என்ற பகுதியில் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க மத்திய மாநில அரசுகள் முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. நகரில் இருந்து சுமார் 6 கிமீ தொலைவில் அமைந்துள்ள அப்பகுதிக்கு செல்லும் சாலை ஏற்கெனவே கடுமையாக சேதம் அடைந்தும், சமீபத்தில் பெய்த தொடர் மழைக்கு, சாலை மேலும் மோசமாக சேதம் அடைந்து வாகனங்கள் பயணிக்க முடியாத அளவிற்கு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.

ஹெலிகாப்டர் தளம் அமைக்க தொடர் ஆய்வுகளுக்கு வரும் அரசு அதிகாரிகளின் வாகனங்கள், அச்சாலையில் பயணிக்க முடியாமல், திணறும் நிலையில் உள்ளதை மாவட்ட நிர்வாகம் கவனத்தில் கொண்டு முக்கியத்துவம் வாய்ந்த அந்த சாலையை புதிதாக உறுதித்தன்மையுடன் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story