கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள்

கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள்
X

 கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள் விவசாயிகள் 

கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக பேத்துப்பாறை பெரியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் கயிறு மூலம் கடக்கின்றனர்

திண்டுக்கல் மாவட்டம் ,கொடைக்கானல் அருகே கயிறு கட்டி ஆற்றை கடக்கும் பொதுமக்கள், விவசாயிகள் பாலம் அமைத்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தொடர் மழை காரணமாக பேத்துப்பாறை பெரியாற்றிலும் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் வெள்ளி நீர்வீழ்ச்சி, டைகர் சோலை அருவிகள், வில்பட்டி ஆறு உள்ளிட்டவற்றில் இருந்து வரும் தண்ணீர் அப்படியே பேத்துப்பாறை பெரியாற்றில் கலப்பதால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.இதனால் பேத்துப்பாறை கிராமத்திற்கும், அங்குள்ள வயல்வெளிக்கும் செல்லும் பாதை துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் , பொதுமக்கள் வெளியில் வேலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களும், விவசாயிகளும் இணைந்து கயிறு கட்டி ஆற்றை கடந்து வயல்வெளிக்கு சென்று வருகின்றனர். இதனால் மாவட்ட நிறுவகம் இப்பகுதியில் கயிறு பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story