பழனியில் கடைகள் எதுவும் இல்லாததால் பாதயாத்திரை பக்தர்கள் அவதி
கடைகள் அடைக்கப்பட்டதால் பாதயாத்திரை பக்தர்கள் சிரமப்பட நேரிட்டது
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் பாதயாத்திரை பக்தர்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது.கடைகள் எதுவும் இல்லாததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட்டுள்ளது. வெள்ளி,சனி,ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டுத் தளங்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று பழனி நகர் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது.
இதன்படி, பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட் பகுதியில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. வருகின்ற 12ம்தேதி தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதனை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் பாதவிநாயகர் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.இந்நிலையில் பழனி கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தர்கள், உணவு மற்றும் டீக்கடைகள் எதுவும் இல்லாததால் அவதிக்குள்ளாகினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu