பழனி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் நோயாளிகள்

பழனி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியின்றி தவிக்கும் நோயாளிகள்
X

தகர கொட்டகையில் இயங்கும் பழனி அரசு மருத்துவமனை.

பழனி அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதியின்றி நோயாளிகள் தவித்து வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழனி ஆகிய 2 நகரங்களிலும் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பழனி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் திண்டுக்கல்லில் இயங்கி வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை பழனி அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து நோயாளிகளுக்கு அனைத்து வசதிகளும் கிடைக்கும் வகையில் ரூ.90 கோடி மதிப்பில் பழனி அரசு மருத்துவமனை விரிவாக்கம் செய்து புதிய கட்டிடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் பிரிவிற்கு தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகின்றனர். பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதால் உள்நோயாளி களுக்கு தகரத்தால் ஆன தற்காலிக செட் அமைத்து அங்கு தங்க வைக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படு கிறது. அங்கு இடப்பற்றா க்குறை காரணமாக மேலும் சிலர் மரத்தடியில் படுக்க வைத்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வார்டுகளை இடித்து விட்டதால் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் உள்ள பொதுக்கழி ப்பறையை அனைவரும் பயன்படுத்தும் நிலை உள்ளது. மேலும் அங்கு குடிநீர் வசதியும் சரிவர செய்து தரப்பட வில்லை.

பகலில் வெயில் வாட்டி எடுத்துவரும் நிலையில் தகரசெட்டுகளுக்குள் தங்கியிருக்கும் நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வரு கின்றனர். கட்டுமான பணிகள் நிறைவடைய இன்னும் பல மாதங்கள் ஆகும் என்பதால் அதுவரை நோயாளிகள் தகர செட்டுக்குள் இருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கட்டிட பணிகளால் நோயாளிகள் பாதிப்படை ந்து வருகின்றனர். பல சமயங்களில் நோயாளிகள் அலைக்கழிக்கப்படுவதால் மிகுந்த மனவேதனை அடைந்து வருகின்றனர்.

பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு பழனி நகர் மட்டுமின்றி பல்வேறு கிராமங்களில் இருந்து சிகிச்சைக்கு பொதுமக்கள் வருகின்றனர். இதுதவிர அடிக்கடி விபத்துகள் நடைபெறும் பகுதியாகவும் இருப்பதால் சாலை விபத்துகளில் சிக்கி உயிர்காக்கும் அறுவை சிகிச்சைக்கும் வருகின்றனர்.

உரிய நேரத்தில் அவர்களுக்கு சிகிச்சை கிடைக்காத நிலை ஏற்படும்போது உயிரிழப்பு அபாயமும் உள்ளது. சிகிச்சைக்கு வரும் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் அலைக்கழிக்கப்படு சிரமம் அடைந்து வருகின்றனர். பலர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று விடும் மனநிலைக்கு வந்தாலும் பலர் வேறு வழியின்றி அரசு ஆஸ்பத்திரியிலேயே தங்கி சிகிச்சை பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே கட்டுமானப்பணிகள் நிறைவடையும் வரை நோயாளிகளுக்கு அடிப்படை வசதிகளுடன் உரிய சிகிச்சை கிடைப்பதை மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!