பழனி கோவில் இழுவை ரயில்: பயணச்சீட்டு தராததால் பக்தர்கள் வாக்குவாதம்

பழனி முருகன்கோவிலில் இழுவைரயிலுக்கு டிக்கெட் வழங்காமல் தாமதப்படுத்தியதால் அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள்.
பழனி கோவிலுக்கு செல்லும் ரயிலிலுக்கு வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு பயணச்சீட்டு தராமல் காக்க வைப்பதாகக்கூறி கோவில் அதிகாரியை முற்றுகையிட்டு பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறுபடை படை வீடுகளில் மூன்றாம் வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலுக்கு சாதாரண நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் ,திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து முருக பெருமானை தரிசனம் செய்வது வழக்கம் ,
கொரோனோ காலம் என்பதால் காலை 6 மணி முதல் இரவு 8 வரை மட்டுமே கோவில் செயல்பட்டு வருகிறது.கோவிலுக்கு வரும் பக்தர்கள் , படிப்பாதை ,யானை பாதை ,மின் இழுவை ரயில்,ரோப் கார் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ரோப்கார் சேவை வருடாந்திர பராமரிப்பு பணிக்காக நிறுத்தபட்டுள்ளதால், பக்தர்கள் மின் இழுவை ரயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை உள்ளது. மாற்றுத் திறனாளிகள் ,முதியோர்கள், குழந்தைகள் செல்ல என பக்தர்கள் மூன்று மின் இழுவை ரயில் சேவையை பக்தர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த ஒருவார காலமாக மின் இழுவை ரயில் காலை 6 மணிக்கு திறக்கபட்டு இரவு 8 மணி வரை இயக்கபட்டு வரும் நிலையில், கடந்த 2 நாள்களாக மாலை வேளையில் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்காமல், தனியாக பணம் வாங்கி கொண்டு விடுவதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், பக்தர்களுக்கு 10 ரூபாய் டிக்கெட் வழங்காமல் 50 ரூபாய் டிக்கெட் மட்டும் வழங்கப்படுவதாகவும் ,
நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்களுக்கு டிக்கெட் வழங்காமல் தனி கேட் வழியாக பணம் பெற்று கொண்டு அனுப்புவதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோவில் அதிகாரியிடம் பக்தர்கள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.
முறையாக அறிவப்பு பலகை வைக்கப்பட வேண்டும் பக்தர்களை அலைகழிக்கக் கூடாது என்றும் ,கோவிலில் மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஐஏஎஸ் அதிகாரி இருந்த வரை இது போன்ற எந்த பிரச்னையும் வந்ததில்லை எனவும் , மீண்டும் கோவிலுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரியை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu