பழனியில் குவிந்த பக்தர்கள்: கொரோனா கட்டுப்பாடுகளால் திருப்பி அனுப்பிவைப்பு

பழனியில் குவிந்த பக்தர்கள்: கொரோனா கட்டுப்பாடுகளால் திருப்பி அனுப்பிவைப்பு
X
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு, பழனி முருகன் கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வந்த நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால், அவர்கள் அனைவரும் அடிவாரத்திலேயே திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி, கோவிலுக்குள் சென்று வழிபட பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பழனி முருகன் கோயிலிலும் இன்றுமுதல் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று சித்ரா பவுர்ணமி என்பதால் ஏராளமான வெளியூர் பக்தர்கள் பழனிக்கு சாமி தரிசனம் செய்ய, காவடி எடுத்தும், தீர்த்தக்குடம் எடுத்தும் வந்திருந்தனர். மலைக்கோவிலுக்கு சென்ற பக்தர்களை, மலை அடிவாரத்திலேயே தடுத்து நிறுத்திய கோயில் பாதுகாவலர்கள், கொரோனா கட்டுப்பாடுகளை சுட்டிக்காட்டி, சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அவர்களிடம் தெரிவித்தனர்.
அத்துடன், பக்தர்களை மலையடிவாரத்தில் உள்ள பாத விநாயகர் கோவில் முன்பாக சாமி தரிசனம் செய்ய அனுமதித்துவிட்டு, அவர்கள் அனைவரையும் பத்திரமாக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறுவுறுத்தி அனுப்பி வைத்தனர். இதனால், வேறுவழியின்றி பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!