பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு: ரூ.4.29 கோடி வருவாய்

பழனி முருகன் கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு: ரூ.4.29 கோடி வருவாய்
X
பழனியில் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நிறைவடைந்தது.

பழனியில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவு ரூ.4 கோடியே 29 லட்சம் வருவாய்.

பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார்.

நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவடைந்தது. இதில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.1 கோடியே 92 லட்சத்து63ஆயிரத்து 140-ம், தங்கம் 461 கிராம், வெள்ளி 4169 கிராம், வெளிநாட்டு கரன்சி 138 இருந்தது.

அதன்படி 2 நாட்கள் நடந்த உண்டியல் காணிக்கை எண்ணிக்கை மூலம் ரூ.4 கோடியே 29 லட்சத்து 27 ஆயிரத்து 965-ம், தங்கம் 1914 கிராம், வெள்ளி 19,164 கிராம், வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் 288-ம் கிடைத்துள்ளது.

காணிக்கை எண்ணும் பணியில் பழனி பகுதியில் கல்லூரி மாணவ-மாணவிகள், வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai marketing future