பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

பழநி முருகன் கோவில் கும்பாபிஷேகம்: சிறப்பு ரயில்கள் அறிவிப்பு
X

பைல் படம்.

பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம், தைப்பூசத்தை முன்னிட்டு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி தைப்பூச திருவிழா கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பக்தர்கள் அறுபடை வீடுகளிலும் தரிசனம் செய்வது வழக்கம். இந்த முறை அறுபடை வீடுகளில் ஒன்றான பழநியில் கூடுதல் சிறப்பம்சமாக கும்பாபிஷேக விழாவும் கொண்டாடப்படுகிறது. அதற்கான முன்னேற்பாடுகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. அதன்படி பழநி முருகன் கோயில் கும்பாபிஷேகம் நாளையும், தைப்பூசம் பிப்ரவரி 5 ம் தேதியும் நடைபெறுகிறது.

இதையொட்டி நாளை, நாளை மறுநாள் மற்றும் பிப்ரவரி 3, 4, 5 ஆகிய நாட்களில் மதுரை - பழநி இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.மதுரையிலிருந்து காலை 10.00 மணிக்கு புறப்படும் ரயில் மதியம் 12.30 மணிக்கு பழநி சென்று சேரும். மறு மார்க்கத்தில் பழனியில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த ரயில்கள் சோழவந்தான், கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பக்தர்கள் தைப்பூசத்தையொட்டி வீட்டில் இருந்தே பிரசாதங்களை பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளது. அதில், "விரைவு அஞ்சல் சேவை" என்ற பெயரில் தைப்பூசத்திற்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி பிரசாதத்தை பெற ரூ.250 செலுத்தி, அருகில் உள்ள தபால் நிலையத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என்றும், பிறகு வீட்டு வாசலுக்கே பிரசாதம் டெலிவரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரசாத தொகுப்பில், சுவாமி புகைப்படம், பழனி பஞ்சாமிர்தம், விபூதி பிரசாதம் இணைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Next Story
எப்டியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க!..டிங்கா டிங்கானு ஒரு நோயாமா..பேரு தாங்க அப்டி,ஆனா பயங்கரமான நோய்!..