வனப்பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்த பழனி மாணவி
இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி மகிழும் பெற்றோர்
பழனி அருகே கலிக்கநாயக்கன் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் இவர் கீரனூர் அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார் . இவரது மனைவி சந்திரா மணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவரது மூத்த மகள் திவ்யா என்பவர் இந்திய வனப் பணி தேர்வில் தமிழ்நாட்டில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்திய அளவில் பத்தாம் இடம் பிடித்துள்ளார்.
இவர்களது பெற்றோர்கள் இந்திய வனப் பணி தேர்வில் வெற்றி பெற்ற தங்களது மகளுக்கு இனிப்பு ஊட்டி வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் தேர்வில் வெற்றிபெற்ற திவ்யா சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் பிஇ எலக்ட்ரிக் எலக்ட்ரானிக்கல் இன்ஜினியர் படித்து உள்ளார்.
மேலும் இந்த மாணவி மூன்று ஆண்டுகளாக படித்து முதல் தேர்விலேயே வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இந்த பணியில் உண்மையாகவும் நேர்மையாகவும் பணியாற்ற உள்ளதாகவும் இந்த யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றதற்கு தன்னுடைய பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற யு.பி.எஸ்.சி தேர்வுகளில் அதிக அளவில் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் வெற்றி பெற்று பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என தேர்வில் வெற்றி பெற்ற திவ்யா கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu