/* */

7 கோடியை தாண்டிய பழனி உண்டியல் காணிக்கை: கோயில் நிர்வாகம்

7கோடியே 17லட்சத்து 42ஆயிரத்து 126ரூபாய் மற்றும் தங்கம் 1கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ 1277கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529நோட்டுகளும் வருவாயாகக் கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

7 கோடியை தாண்டிய பழனி உண்டியல் காணிக்கை: கோயில் நிர்வாகம்
X

பழனி முருகன் கோயில் (பைல் படம்)

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்த தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்ற நிலையில், கோயிலின் வருவாய் ஏழு கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சுவாமி தரிசனம் மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தரும் நிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக கோவிலின் பல்வேறு இடங்களில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன .

இதை அடுத்து கும்பாபிஷேகம் மற்றும் தைப்பூச திருவிழா நடைபெற்று நிறைவடைந்த நிலையில் உண்டியல்கள் நிறைந்து காணப்படுகின்றன . அவற்றை என்னும் பணி மூன்று நாட்களாக நடைபெற்று நிறைவடைந்ததாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அவற்றில் ரொக்கமாக 7கோடியே 17லட்சத்து 42ஆயிரத்து 126ரூபாய் மற்றும் தங்கம் 1கிலோ 248 கிராமும், வெள்ளி 48 கிலோ 1277கிராமும், வெளிநாட்டு கரன்சி 2529நோட்டுகளும் வருவாயாகக் கிடைத்துள்ளது. மேலும் கோவிலின் இணை ஆணையர் நடராஜன் முன்னிலையில் நடைபெற்ற உண்டியல் எண்ணும் பணியில் தேவஸ்தான ஊழியர்கள், வங்கி அதிகாரிகள், கல்லூரி மாணவிகள், பேராசிரியர்கள், மற்றும் தொண்டு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டனர். இப்பணி சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.

Updated On: 23 Feb 2023 11:00 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. நாமக்கல்
    சூறாவளிக்காற்றால் மின்கம்பம் முறிந்தது; இருளில் மூழ்கிய கிராமம்
  3. வந்தவாசி
    தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நீர் மோர் பந்தல்
  4. திருவண்ணாமலை
    நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
  5. செய்யாறு
    பிளஸ் 1 பொதுத்தேர்வில் 88.91 சதவீதம் பேர் தேர்ச்சி
  6. செய்யாறு
    செய்யாற்றில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  7. வீடியோ
    மனமுருகி சொன்ன இஸ்லாமிய மாணவி | Annamalai சொன்ன அந்த வார்த்தை |...
  8. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  10. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்