பழனி அரசு மருத்துவமனைக்கு இலவசமாக ஆக்சிஜன் செறிவூட்டிகள் - எம்எல்ஏ வழங்கல்

பழனி அரசு மருத்துவமனைக்கு தேவையான ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, எம்.எல்.ஏ. செந்தில்குமார் இலவசமாக வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.இதனை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதனிடையே, பழனி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைப்பதில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை போக்க, அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி.செந்தில்குமார் தனது சொந்த நிதியில் இருந்து, 25 ஆக்சிஜன் செறிவூட்டி இயந்திரங்களை, அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இதில், பழனி அரசு மருத்துவமனைக்கு 15 இயந்திரங்களும், கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு 10இயந்திரங்களும் வழங்கப்பட்டன.

சட்டமன்ற உறுப்பினர்‌ ஐ.பி.செந்தில்குமார் வழங்கிய ஆக்சிஜன் இயந்திரங்களை , ழனி அரசு தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!