பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் 3-வது வின்ச்சுக்கு புதிய சாப்ட்

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் 3-வது வின்ச்சுக்கு புதிய சாப்ட்
X

பழுதடைந்த நிலையில் உள்ள பழைய சாப்ட்.

பழனி முருகன் கோவிலுக்கு செல்லும் 3-வது வின்ச்சுக்கு புதிய சாப்ட் பொருத்தும் பணி நடந்து வருகிறது.

பழனி மலைக் கோவில் அருள்மிகு தண்டாதபாணி சுவாமி கோவிலுக்கு சென்று வர படிப்பாதை, யானைப்பாதை இரு வகையான பாதைகள் உள்ளன. இது தவிர ரோப்கார், வின்ச் சேவைகளும் உள்ளன. தற்போது 3 வின்ச் பாதைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 3 வின்ச்களும் செய ல்பாட்டில் உள்ளன.

3-வது வின்ச் பாதையில் அதிக வசதிகளுடன் அதிக நபர்களை ஏற்றிச் செல்லும் புதிய பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன. புதிய வின்ச் பெட்டிகளுக்கு தகுந்த நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. 3-வது புதிய பெட்டிகளை இயக்க பணிகள் நடந்து வருகிறது. 3-வது வின்ச் செயல்படுத்தும் எந்திரத்தில் பொருத்தப்பட்டு இருந்த பழைய சாப்ட் பழுதடையும் நிலையில் இருந்தது.

இதனால் புதிய பெட்டிகள் பொருத்தும் போது பழைய சாப்ட்டுக்கு பதிலாக பல் சக்கரத்துடன் கூடிய புதிய சாப்ட் சென்னையில் இருந்து வரவழைக்க ப்பட்டது. புதிய சாப்ட் பொருத்தப்பட்ட பிறகு விரைவில் பணிகள் நிறைவு பெற்று 3-வது வின்ச் செயல்பாட்டுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது வின்ச் செயல்பாட்டுக்குவந்தால் பழனிமலை முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மேலும் எளிதாக சுவாமி தரிசனம் செய்வதற்கு வழி பிறக்கும் என்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!