பழனி மலைக்கோயிலில் முருகன்- தெய்வானை திருக்கல்யாண வைபவம்
சூரர்களை வதம் செய்து வெற்றிவாகை சூடிய முருகனுக்கு தெய்வானையை மணம்முடித்து வைக்கும் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் பழனி மலைக்கோயிலில் நடைபெற்றது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படைவீடான பழனியில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 4ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கந்தசஷ்டியின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடைபெற்றது.இதனைத்தொடர்ந்து அசுரர்களை அழித்து போரில் வெற்றிபெற்ற சண்முகருக்கு தெய்வானையை மணமுடித்து வைக்கும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது. மலைக்கோயில் மேற்பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னதாக அருள்மிகு சண்முகர்-வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.கந்தசஷ்டி திருவிழா நாளான நேற்றுடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பழனி கோயில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட கலந்துகொண்டனர்.கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லாததால் கூட்டமின்றி திருக்கல்யாணம் நடைபெற்றது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu