இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்

இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்
X

பழனி இசைக்கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்.

பழனி தண்டாயுத பாணிகோயில் இசை கல்லூரி மாணவர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு பட்டயம் வழங்கினார்

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் சார்பில் மலை அடிவாரத்தில் தவில், நாதஸ்வரம் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சி பெற்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட ஆட்சியர் விசாகன், சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டயம் மற்றும் தவில், நாதஸ்வர கருவிகள் வழங்கி வாழ்த்தினர்.

அதனைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மலையடிவாரத்தில் அமைய உள்ள முதியோர் இல்ல கட்டிட பணிக்கான இடத்தை ஆய்வு செய்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!