பழனியில் ஒரே நாளில் கூடிய லட்சக்கணக்கான பக்தர்கள்: பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு

பழனியில் ஒரே நாளில் கூடிய  லட்சக்கணக்கான பக்தர்கள்: பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு
X

பழனிகோயில் பஞ்சாமிர்தத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்ப நேரிட்டது.

பஞ்சாமிர்தத்தை கூடுதலாக தயார் செய்து தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் ஒரே நாளில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியதால் பஞ்சாமிர்த தட்டுப்பாடு ஏற்பட்டது இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். தற்போது தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. இந்த திருவிழா 10 நாட்களுக்கு நடைபெறும்.

வருகின்ற 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றும் நாளையும் மட்டுமே சாமி தரிசனம் செய்ய முடியும் என்பதால் இன்று ஒரே நாளில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்துள்ளனர்.சுவாமி தரிசனம் செய்து விட்டு திரும்பும் பக்தர்களுக்கு பிரசாதமாக தேவஸ்தான நிர்வாகம் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டு பழனிமலை அடிவாரம் கிரி வதி பகுதிகளில் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

காலை முதலே பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தேவஸ்தானம் சார்பில் வைப்பட்டுள்ள பஞ்சாமிர்தம் கடைகள் மற்றும் தனியார் பஞ்சாமிர்தம் கடைகளில் பிரசாதமாக வாங்கி சென்ற நிலையில் தற்போது இன்னும் பல லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பி வந்த நிலையில் தேவஸ்தன பஞ்சாமிர்தம் கடைகள் மற்றும் தனியார் கடைகளில் பஞ்சாமிர்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக கோவில் நிர்வாகம் சார்பில் விற்பனை செய்யப்படும் இடங்களில் பஞ்சாமிர்தம் கிடைக்காததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.மேலும் பஞ்சாமிர்தத்தை தயார் செய்து தட்டுப்பாடு இல்லாமல் வினியோகம் செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil