பழனியில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்: பேருந்து வசதி இல்லாதால் பக்தர்கள் அவதி
பழனி பேருந்து நிலையத்தில் திரண்ட பக்தர்கள்.
திண்டுக்கல் மாவட்டம்,பழனியில் சாமிதரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில்,பேருந்துகள் பற்றாக்குறையால பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நாளை மறுநாள் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.இந்நிலையில் கோரோனோ பரவல் அதிகரிப்பு காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.
இதன் காரணமாக வாரத்தின் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய மூன்று தினங்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் திங்கட்கிழமை இன்று லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். மேலும் தைப்பூசத் திருவிழாவிற்கு பக்தர்கள் வர தடை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் பரவியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் முன்கூட்டியே சாமி தரிசனம் செய்ய பழனி வந்தனர்.
இதன் காரணமாக நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். இதன் காரணமாக பழனி கோவில் சார்பில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தம் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் பஞ்சாமிர்தத்திற்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில் பழனி வந்த பக்தர்கள் தங்களது ஊருக்கு திரும்ப பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.பக்தர்கள் அதிகளவில் குவிந்ததால் பேருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது.
இதன் காரணமாக கொரோனா கட்டுப்பாடுகளை மீறி பேருந்துகளில் அதிகளவு எண்ணிக்கையில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.மூன்று நாட்களுக்கு சாமி தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடை முடிந்து திங்கட்கிழமை அதிகளவு பக்தர்கள் வருவார்கள் என்று கணித்து கூடுதல் பேருந்துகளை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பக்தர்கள் அவதி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu