பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரையுலக பிரபலங்கள்!

பழனி முருகன் கோயிலுக்கு படையெடுக்கும் திரையுலக பிரபலங்கள்!
X

பழனி முருன் கோயிலின் அழகிய தோற்றம்.

பழனி முருகன் கோயிலில் திரையுலக பிரபலங்கள் பலர் அடுத்தடுத்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூச விழா சமீபத்தில் நடைபெற்றது. ஆண்டுதோறும் பக்தர்களின் கூட்டம் நிறைந்து காணப்படும் பழனி முருகன் கோயிலில் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் வந்து பலர் சுவாமியை தரிசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில், பிரபல நடிகை சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோயிலில் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தார். சரும நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட நடிகை சமந்தா நேர்த்திக் கடனாக பழனி வந்துச் சென்றதாக தகவல்கள் பரவியது.


அது ஒருபுறம் இருக்க, தற்போது, பழனி முருகன் கோவிலில் நடிகர் சந்தானம் கிரிவலம் வந்து சாமி தரிசனம் செய்து உள்ளார். நகைச்சுவை நடிகராக தமிழ் திரையுலகில் அறிமுகமாகி தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம் பழனி மலை கிரிவலப் பாதையில் கிரிவலம் சென்றார்.

தொடர்ந்து, ரோப் கார் மூலமாக மலைக்கு மேல் சென்ற நடிகர் சந்தானம், பழனி முருகனை தரிசனம் செய்தார். நடிகர் சந்தானத்திற்கு பழனி கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் நடிகர் சந்தானம் நடிக்கும் ``வடக்குப்பட்டி ராமசாமி" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அவர் முருகனை தரிசித்து சென்றுள்ளார்.

கூல் சுரேஷ் தரிசனம்:


இதற்கிடையே, நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியாக உள்ள திரைப்படம் ``பத்து தல" திரைபப்டத்தின் பாடல்கள் மற்றும் திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என பழனி முருகனிடம் வேண்டி, நடிகர் சிலம்பரசனின் தீவிர ரசிகரும், நடிகருமான கூல் சுரேஷ் பழனி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

பழனி மலை அடிவாரத்தில் இருந்து கிரிவலம் வந்து படிவழிப்பாதையில் மலைக்கோயிலுக்கு சென்ற கூல் சுரேஷ், பத்து தல திரைப்படத்தின் போஸ்டரை கையில் வைத்துக்கொண்டு ``பழனியாண்டவருக்கு அரோகரா" என்ற கோஷம் முழங்க நடந்து சென்றார்.

ராக்கால பூஜையில் பங்கேற்று பழனி முருகனை தரிசனம் செய்த நடிகர் கூல் சுரேஷ், செய்தியாளர்களிடம் கூறும்போது நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியாக உள்ள ``பத்து தல" திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வேண்டும் என வேண்டிக் கெண்டதாக தெரிவித்தார்‌. அவருடன் நடிகர் சிலம்பரசனின் ரசிகர்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!