கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலய திருவிழா மிக எளிமையாக நடந்தது

கொடைக்கானல்  புனித சலேத் மாதா ஆலய திருவிழா மிக எளிமையாக நடந்தது
X

கொடைக்கானல் புனித சலேத் மாதா.

கொடைக்கானலில் உலக புகழ் பெற்ற புனித சலேத் மாதா ஆலய திருவிழா மிக எளிமையாக நடைபெற்றது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் புனித சலேத் மாதா ஆலயத்தின் 155 வது ஆண்டின் திருவிழா ஆடம்பரம் இன்றி எளிமையாக கொண்டாடப்பட்டது.

கடந்த ஒன்றாம் தேதி தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் படி கொடியேற்று விழா நடந்தது. இதை அடுத்து நாள்தோறும் சலேத் அன்னை ஆலயத்தில் நவநாள் திருப்பலி பூஜைகள் நடந்தது. ஆகஸ்ட் 14 ,15 ஆகிய இரண்டு நாட்களும் நடத்தவேண்டிய திருவிழா தமிழக அரசின் கட்டுப்பாடுகள் காரணமாக நேற்று ஆடம்பரம் இன்றி எளிமையாக விழா நடந்தது.

முன்னதாக 155 வது ஆண்டின் திருவிழா திருப்பலி நடந்தது. இந்த திருப்பணி பூஜைக்கு கொடைக்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலய பங்குத் தந்தையும் வட்டார அதிபருமான அருட்தந்தை எட்வின் சகாயம் ராஜா தலைமை தாங்கினார். செண்பகனூர் பங்குத்தந்தை ஏஞ்சல் ,பெருமாள் மலை பங்குத்தந்தை பிரிட்டோ பாக்கியராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பலி பூஜைக்கு பின்னர் ஆடம்பரம் இல்லாமல் அன்னையின் சிறு தேர் ஆலயத்தை சுற்றி எடுத்து வரப்பட்டது .

இந்த திருவிழாவின் சிறப்பம்சமாக சலேத் மாதா காட்சி கொடுத்த பிரான்ஸ் நாட்டிலிருந்து சொரூபம் கொண்டு வரப்பட்டது. இந்த சொரூபம் ஆலயத்தில் வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபட்டனர்.

Tags

Next Story
azure ai healthcare