மும்மத தலைவர்கள் பங்கேற்ற கொடைக்கானல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

மும்மத தலைவர்கள் பங்கேற்ற கொடைக்கானல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
X

கொடைக்கானல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மும்மத தலைவர்கள் பங்கேற்ற கொடைக்கானல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா மிக சிறப்பாக நடைபெற்றது.

கொடைக்கானல் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் மும்மத தலைவர்கள் பங்கேற்றனர்.

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பழனி தொகுதி எம்.எல்.ஏ. செந்தில்குமார், திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ஸ்வேதா ராணி கணேசன், முன்னாள் நகர் மன்ற தலைவர்கள் முகமது இப்ராஹிம், கோவிந்தன், ஸ்ரீதர், மாரியம்மன் கோவில் தலைவர் முரளி, கொடைக்கானல் நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மாவட்ட மாணவ ரணி அமைப்பாளர் அஸ்வின் பிரபாகரன், மாவட்ட துணைச் செயலாளர் பிலால் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கோவில் இந்து சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்து சமய அறநிலையத்துறை அலுவல ர்களும் கலந்து கொண்டனர்.

கொடைக்கானல் பகுதியைச் சேர்ந்த 3 மத தலைவர்கள் மற்றும் நிர்வா கிகள் கலந்து கொண்டனர். கொடைக்கானல் டவுன், மூஞ்சிக்கல், அண்ணா நகர், நாயுடுபுரம் பள்ளி வாசல்களை சேர்ந்த ஜமாத்தார்களும், கொடை க்கானல் மூஞ்சிக்கல் திரு இருதய ஆலயத்தை சேர்ந்த கத்தோலிக்க கிறிஸ்தவர்களும், உதவி பங்கு தந்தை நிக்கோலஸ், கொடைக்கானல் முன்னாள் நகர் மன்ற தலைவரும் இந்திய பெந்தகோஸ்தே சபையின் நிர்வாகியுமான டாக்டர் குரியன் ஆபிரகாம், கிளாசிக் சலாமத், டி.ஜி. அசோசியேட்ஸ் தனசேகரன், எஸ். ஆர் அசோசியேட்ஸ் ராம் மோகன், கொடைக்கானல் நகர தி.மு.க. துணைச் செயலாளர்கள் சக்திமோகன், சுப்பிரமணி, கோமதி சக்திவேல், நகர பொருளா ளர் முகமது நைனார், நகர அவைத் தலைவர் மரிய ஜெயந்தன், மாவட்ட பிரதிநிதிகள் சுதாகர், இளங்கோவன், அரசு வக்கீல் சக்திவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்