கொடைக்கானல் மலைப்பகுதியின் காப்பிக்கொட்டை விலை கிலோ 300 ரூபாயை தொட்டது

கொடைக்கானல் மலைப்பகுதியின் காப்பிக்கொட்டை விலை கிலோ 300 ரூபாயை தொட்டது
X

பிரேசிலில் நிலவிய கடும் உறைபனியைத் தொடர்ந்து பெய்த கன மழையால் அப்பகுதியில் காப்பி உற்பத்தி 50 சதவிகிதமாக குறைந்து போனதால், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியின் காப்பிக்கொட்டை விலை கிலோ 300 ரூபாயை தொட்டது.

உலகில் காப்பி உற்பத்தில் முதன்மையாக உள்ள பிரேசில் நாட்டில் கடந்த மாதத்தில் கடும் உறைபனியும், அதனை தொடர்ந்து தொடர் கன மழையும் பெய்ததால், காப்பி கொட்டைகள் உற்பத்தி 50 சதவிகிதமாக குறைந்துள்ளதாக, கொடைக்கானலில் இயங்கி வரும் தென்மண்டல காப்பி ஆராய்ச்சி நிலையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதனால் கொடைக்கானல் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் காப்பி கொட்டைகளுக்கு நாடு முழுவதும் வரவேற்பு அதிகரித்து, காப்பி கொட்டை விலை கிலோ ஒன்றிற்கு 300 ரூபாய் வரை உயர்துள்ளதாகவும், இந்த உயர்வு இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஆராய்ச்சி நிலைய முனைவர் பாபு தகவல் தெரிவித்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பின்னர், மலைப்பகுதிகளில் காப்பி கொட்டைகள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil