கொடைக்கானலில் கடல் அலை போல காட்சி அளித்த மேக கூட்டம்: சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் கடல் அலை போல காட்சி அளித்த மேக கூட்டம்: சுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி
X

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடல் அலை போல காட்சி அளித்த மேக கூட்டங்கள்.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடல் அலைகள் போல படர்ந்து கிடந்த மேக கூட்டங்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு விய‌ப்பு.

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடல் அலைகள் போல படர்ந்து கிடந்த மேக கூட்டங்கள், சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு விய‌ப்பு.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கான‌ல் ம‌லைப்ப‌குதிக‌ளில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது அட‌ர்ந்த‌ மேக‌மூட்ட‌மும், இர‌வில் குளிரும் நிலவுகிறது. இத‌னை தொட‌ர்ந்து ம‌லைப்ப‌குதிக‌ள் முழுவதும் கடல் அலைகள் போல மேக கூட்டங்கள் சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது.

இந்த‌ க‌ண் கொள்ளாக்காட்சியினை கோக்கர்ஸ் வாக் சுற்றுலாத‌ல‌ம், சிட்டி வியூ உள்ளிட்ட‌ ப‌குதிக‌ளில் இருந்து த‌ரைப்ப‌குதிக‌ளை பார்க்கும் பொழுது மேக கடல் அலை போல மேக கூட்டங்கள் மலைபகுதிகள் முழுவ‌தும் தவழ்ந்து காண்போரின் க‌ண்க‌ளுக்கு விருந்தளிக்கும் வ‌ண்ண‌மாக‌ அமைந்துள்ள‌து. இந்த ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசிப்ப‌துட‌ன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!