/* */

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் தொடக்கம்

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது.

HIGHLIGHTS

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் தொடக்கம்
X

பழனி முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா நேற்று (சனிக்கிழமை) காப்புகட்டுதலுடன் தொடங்கியது.

இந்த திருவிழா 7 நாட்கள் நடக்கிறது. விழாவின் 6 நாட்களும் சாயரட்சை பூஜைக்கு பின்பு சண்முகர் அர்ச்சனை, தீபாராதனை, சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடு நடைபெறுகிறது. மேலும் இரவு 7 மணிக்கு சிறப்பு தீபாராதனைக்கு பின் தங்கரத புறப்பாடு நடைபெறுகிறது. 6-ம் திருநாளான 18-ந் தேதி யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டு வரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.

7-ம் திருநாளான 19-ந்தேதி திருக்கார்த்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு, உடன் விஸ்வரூப தரிசனம், சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடக்கிறது. அதன்பின்னர் சண்முகர் அர்ச்சனை, தீபாராதனையை தொடர்ந்து 4.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது.

இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றுதல், மாலை 6 மணிக்கு மேல் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீப ஸ்தம்பத்தில் மகா தீபம் ஏற்றுதல், சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து உபகோவில்களான திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன், லட்சுமி நாராயணப்பெருமாள், பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில்களில் கார்த்திகை தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருக்கார்த்திகை அன்று மதியம் 2 மணி வரை மலைக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன்பின்னர் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதியில்லை. மாலை 6 மணிக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். எனவே 2 மணியில் இருந்து 6 மணி வரை ரோப்கார், மின்இழுவை ரெயில் சேவை நிறுத்தப்படுவதோடு படிப்பாதையும் அடைக்கப்படும்.

மேலும் திருவிழாவில் மண்டகப்படி அனைத்தும் கோவில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும். திருக்கார்த்திகை விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் யூடியூப் சேனல் மற்றும் சமூக வலைத்தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 14 Nov 2021 8:39 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?