கொடைக்கானலில் கடும் உறைபனி: வெள்ளை கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் புல்வெளி

கொடைக்கானலில் கடும் உறைபனி: வெள்ளை கம்பளம் விரித்தது போல் காட்சியளிக்கும் புல்வெளி
X

கொடைக்கானலில் கடும் உறைபனி பாெழிவால் பசுமைப் புற்களின் மேல் பனி படர்ந்து காணப்படுகிறது.

கொடைக்கானலில் தொடங்கிய உறைபனி சீசன், பசுமைப் புற்களின் மேல் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சியளிப்பு.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையில் கடும் உறைபனி பொழிவு காணப்படும். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாகவும் இரவில் வெப்ப‌நிலை 10 டிகிரி செல்சியஸ் வரை நிலவி வருவதாலும் ம‌லைப்ப‌குதி முழுவ‌தும் குளிர் நிலவி வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலையில் 8 டிகிரி செல்சியஸ்க்கு குறைவாக வெப்ப நிலை காணப்பட்டு கடும் குளிர் நிலவியதால் பசுமைப் புற்களின் மேல் விழுந்த நீர்ப் பனித் துளிகள் உறைந்து உறைபனியாக மாறியது. குறிப்பாக கொடைக்கானல் நீர்பிடிப்புப் பகுதியான கீழ்பூமி, பாம்பார்புர‌ம், பிரையண்ட் பார்க் உள்ளிட்ட ப‌ல்வேறுப்பகுதிகளில் உறைப்பனி அதிக அளவில் காணப்பட்டது. அந்தப் பகுதிகளில் உள்ள பசுமையான புற்களின் மேல் உறைபனி பொழிவு இருந்ததால் வெள்ளைக் கம்பளம் விரித்தது போல் காட்சிய‌ளித்த‌து.

மேலும் நட்சத்திர ஏரியில் படர்ந்து செல்லும் பனி மூட்டமானது பார்பவர்களின் கண்களுக்கு விருந்தாக காணப்பட்டது. மேலும் கொடைக்கானலில் நிலவி வரும் கடும் குளிரினால் அதிகாலையிலேயே சுற்றுலா பயணிகள் இந்த அழகிய ரம்யமான காட்சியினை பார்த்து செல்கின்றனர். தற்போது ம‌லைப்ப‌குதிக‌ளில் தொடங்கியுள்ள உறை பனி வரும் காலங்களில் அதிகரிக்கும் என எதிர்பார்க்க‌ப்ப‌டுகின்ற‌து.

உறைபனி மற்றும் கடும் குளிர் காரணமாக சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் நில‌வி வ‌ரும் குளிரை ச‌மாளிக்க‌ காலை வேளையில் தீ மூட்டி குளிர் காய்ந்து வ‌ருகின்ற‌ன‌ர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil