அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழனி கோயில் சார்பில் இலவச உணவு வழங்கல்

பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகம் சார்பில் உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோயில்கள் மூலமாக, உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கும், உதவியாளர்களுக்கும் வழங்க உத்தரவிடப்பட்டது.

அதன்படி பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் சார்பில் உணவு பொட்டலங்கள் தயார் செய்யப்பட்டு, பழனி அரசு மருத்துவனையில் சிகிச்சை பெறுவபர்களுக்கு வழங்கப்பட்டது. அவ்வகையில் இன்று, 250 நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது.

பழனி கோயில் செயல்அலுவலர் கிராந்திகுமார் பாடி, உணவு பொட்டலங்களை தலைமை மருத்துவர் உதயகுமாரிடம் வழங்கினார். உணவு பொட்டலங்களை பெற்றுக்கொண்ட நோயாளிகளும் அவர்களது உறவினர்களும் தமிழக அரசிற்கு தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இதேபோல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு நாள்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்குவது படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!