பழநி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை?

பழநி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  தற்கொலை?
X

பழனியில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் குடும்பத்தினர்

பழநி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் வைக்கோல் படப்பிற்கு தீ வைத்து தீக்குள் இறங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது

பழனியருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தை சேர்ந்தவர் சின்னராசு என்கிற முருகேசன் (52).இவருக்கு வளர்மதி (45) என்கிற மனைவியும் சிவரஞ்சனி (21) என்ற மகளும், கார்த்திகேயன் (18) என்ற மகனும் உள்ளனர். மகன் மற்றும் மகள் இருவருமே கல்லூரியில் படித்து வருகின்றனர். சின்னராசுவிற்கு 5 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலம் உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பழனி தீயணைப்பு படையினருக்கு மக்காச் சோளத் தட்டை தீப்பிடித்து எரிவதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தீயை அணைப்பதற்கு ஆக வத்த கவுண்டன் வலசு கிராமத்திற்கு சென்ற பழனி தீயனணைப்பு படையினர் தீயை அணைக்க முயன்ற பொழுது மக்காச் சோளத் தட்டைக்குள் இறந்த நிலையில் நான்கு பேரின் உடல்கள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு துறையினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் சின்னராசு, மனைவி வளர்மதி, மகள் சிவரஞ்சனி,மகன் கார்த்திகேயன் ஆகியோரது உடல் என்று தெரியவந்தது.

மேலும் விசாரணையில் நேற்று வேலாயுதம்பாளையம் புதூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு இரவு 9மணியளவில் வீட்டிற்கு வந்ததும் தெரியவந்தது.

திடீரென மக்காச்சோள தட்டைக்கு தீ வைத்து தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட எஸ்பி சீனிவாசன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகிறார். கடன் பிரச்சினை இல்லாத நிலையில், நடந்திருக்கும் இந்த தற்கொலை சம்பவம் தற்கொலையா? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நிகழ்ந்துள்ளதா? என்ற கோணத்தில் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ரூபி உதவியுடன் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!