கொடைக்கானல் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்
கொடைக்கானல் பகுதியில் காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்ட வனத்துறையினர்
திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் அருகே பயிர்களை சேதப்படுத்திய யானைகளை விரட்டும் பணியில் வனத்துறையினர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, ஆடலூர், கே.சி.பட்டி, பூமலை, பெரியூர், பள்ளத்துக்கால்வாய், உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது.நேற்று முன்தினம் இரவு கன்னிவாடி பீட், ஆடலூர், பூமலை பகுதியில் ஒற்றை ஆண் யானை புகுந்து வாழை, காபி, ஏலக்காய் போன்ற பயிர்களை சேதப்படுத்தியது.
இது போன்று தொடர்ந்து யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனர். யானைகள் அட்டகாசத்தால் மக்கள் வெளியே வரவும் அச்ச மடைந்துள்ளனர். எனவே இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில், கன்னிவாடி வனச்சரகர் சத்திவேல் தலைமையில் வனவர்கள் அறிவழகன், வெற்றிவேல் வனக்காப்பாளர் ரமேஷ்பாபு மற்றும் வேட்டை தடுப்பு காவலர் விரைந்து சென்று வெடி வெடித்து அங்கிருந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுப்பட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu