பழனி குடியிருப்பு பகுதியில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்

பழனி குடியிருப்பு பகுதியில் தீவிபத்து: 4 வீடுகள் எரிந்து சேதம்
X

தீ விபத்து ஏற்பட்ட குடியிருப்பு பகுதி.

பழனி குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் நான்கு வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிக்கு உட்பட்ட கோட்டைமேட்டுத் தெருவில் உள்ள ஒரு குடிசை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் தீ மளமளவென பரவி அருகிலுள்ள ஓட்டுவீடுகளுக்கும் பரவியது‌.

தீ விபத்து குறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் குடிசை வீட்டில் குடியிருந்த 90வயதான காமாட்சி என்ற மூதாட்டியை உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றினர்.

இது குறித்து தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு போராடி தீயை அணைத்தனர்.

குடிசை வீட்டில் பிடித்த தீ அருகில் உள்ள ஓட்டு வீடுகளிலும் பரவிய நிலையில் அந்த வீடுகளில் யாரும் வசிக்காததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பழனி டி.எஸ்.பி., சத்யராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!