கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் தொடர்ந்து யானைகள் அட்டகாசம்

கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில்  தொடர்ந்து யானைகள் அட்டகாசம்
X

யானை சேதப்படுத்திய வாழை மரங்களை வேதனையுடன் பார்க்கும் விவசாயி

கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் யானைகள் வாழைத்தோப்புக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்துவதால் விவசாயிகள் வேதனை.

கொடைக்கானல் கீழ் மலைப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களை யானைகள் தொடர்ந்து அழித்து வருகிறது. இது குறித்து அரசு அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் என பலரிடம் முறையிட்டும் யாரும் கண்டுகொள்ளாத காரணத்தால் கடந்த சில வருடங்களாக யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.

பொதுமக்களை தாக்குவது, விவசாயிகளை தாக்குவது ,விவசாய நிலங்களை அளிப்பது என தொடர்ந்து யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருவதால் கீழ்மலை விவசாயிகள் தங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

தொடர்ந்து கீழ் மலை பகுதிகளான ஆடலூர். பன்றிமலை. KC பட்டி. குப்பம்மாள் பட்டி. பெரியூர். அண்ணாநகர், பேத்துப்பாறை உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்து யானைகளின் அட்டகாசம் குறித்து வனத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாத நிலையில் அழிந்து வரும் விவசாய நிலங்கள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ள கீழ்மலை விவசாயிகள்.

எனவே, இது குறித்து உடனடியாக வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து யானையை வனத்துக்குள் விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!