கொரோனா விதிமீறல்: கொடைக்கானல் அருகே போலி மருத்துவர் கைது

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி,56,இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். இவர், முறையாக மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களை ஏமாற்றி, மக்களுக்கு முறையற்ற முறையில் பார்த்து வந்ததாகவும் இதில் சில பொதுமக்கள் பாதிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழக அரசு விதித்துள்ள கொரோனா கட்டுப்பாடுகளை மீறி, மருத்துவம் பார்க்க அதிக மக்களை கூட்டமாக கூடச் செய்ததாக தகவல் வந்தது. இது குறித்து, கொடைக்கானல் வட்டாசியர், காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை அடுத்து கொடைக்கானல் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் அறிவுரைப்படி, சார்பு ஆய்வாளர் ரமேஷ் ராஜா கொண்ட குழு அமைக்கப்பட்டு, பூம்பாறை கிராமத்தில் விசாரணை நடத்தினர். அதன் முடிவில், போலி டாக்டரை கைது செய்ததுடன் அவரிடம் இருந்து மருந்து மாத்திரைகளையும் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல், போலி மருத்துவம் பார்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu